கோடை காலத்தை (Summer season ) சமாளிக்கலாம் வாங்க
கோடை காலம் என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருவது வெய்யிலிலும் விடுமுறையும் தான். கோடைகாலங்களில் வெய்யிலின் அளவு சற்றுஅதிகமாகவே இருக்கும்.
இபோது முன்பு இருந்ததை விட வெய்யிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.இதற்கு முக்கியக் காரணம் நாம் இயற்கை வளங்களை அழித்து வருவதே.குறிப்பாக நகரமயமாதலின் காரணமாக அனைத்து வனங்களையும் அழித்து அதனை மக்கள் பயன்படுத்தும் இடமாக மாறிபோனதே முக்கியக் காரணம்
.ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை இந்த வெயில் காலம் வருகின்றது,இந்த வெய்யில் காலத்தில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
சரி, இந்த வெயிலின் தாக்குதலால் நமக்கு பல பிரச்சனைகள் நடக்கிறது.குறிப்பாக வியர்க்குரு, உடலில் நீர் வற்றி போதல், சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள், தோல் சம்பந்தமான பிரச்சனைகள் என பல ஏற்படலாம். அவற்றிலிருந்து நம்மை காக்க என்னென்ன செய்யலாம் என காண்போம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- அதிக அளவில் உப்பு, காரம் மற்றும் புளிப்பு சுவை உடைய உணவுப்பொருள்களை தவிர்க்க வேண்டும்.
- உடலில் நீர் வற்றும் போது சோர்வாக இருக்கும். அந்த நேரங்களில் நாம் அதிகளவு நீர் ஆகாரங்களை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக, நீர், மோர் ,சீரகம் கலந்த நீர், இளநீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
- வைட்டமின் A மற்றும் வைட்டமின் C உள்ள பழங்களை அதிக அளவு உன்ன வேண்டும். உதாரணமாக, பப்பாளி, கேரட், மீன் உணவுகள், தக்காளி, எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவை.
- தினமும் காலை மாலை என இரு வேலையும் குளிக்கலாம்.
- ஆடைகளை இறுக்கமாக அணிவதை தவிர்க்கலாம். மேலும் , பருத்தியால் ஆன ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.
- நாம் உடல் வறண்டு போகாமல் இருக்க உடலில் லோஷன்களை பூசிக்கொள்ளவும்.
- காலை மாலையை காட்டிலும் மதியம் வெய்யிலின் அளவு அதிகமாக இருக்கும்.எனவே மத்திய நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்கவும். குறிப்பாக 11 to 5 மணி வரை.
- வெள்ளரி, தர்பூசணி போன்ற கோடைகால பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- தலையில் தேங்காய் எண்ணையை தினமும் தடவுங்கள்.
- மாமிச உணவுகளை தவிர்த்து எளிதில் ஜீரணமாகக்கூடிய நார் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
- இரவில் நன்றாக உறங்குங்கள். குறைந்தது 6 மணி நேர தூக்கம் அவசியம். அதிகபட்சமாக, 8 மணி நேரம் உறங்கலாம்.
- செயற்க்கையாக குளிர்விக்கப்பட்ட குளிர்பானங்களையும், உணவுகளையும் தவிர்த்துக் கொள்ளவும்.
பொதுவான பாதிப்புகள்
வியர்க்குரு மற்றும் தோல் சம்பந்தமான நோய்கள்
வியர்க்குரு மற்றும் தூள் சம்பந்தமான நோய்களை இயற்கை முறையில் சரி செய்ய இங்கே click செய்யவும்.
மேலே உள்ள link ல் அதற்கான தீர்வுகள் தரப்பட்டுள்ளன.
உடல் சோர்வு மற்றும் நீர் கடுப்பு
நமது உடலில் அதிகப்படியான நீரை வெய்யில் காலங்களில் இழப்பதால் நமக்கு உடல் சோர்வு மற்றும் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க நீராகாரங்களை அதிக அளவு எடுத்துக்கொள்ளவும். அதிக அளவு பழங்களை நேரடியாக எடுத்துக்கொள்ளவும். கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானிய கூழை எடுத்துக்கொள்ளவும்.
மேலே கூறிய வழிமுறைகளை பின்பற்றி நாம் இந்த கோடை காலத்தையும் இனி வரும் கோடை காலங்களையும் சமாளித்து நன்கு ஆரோக்கியமாக வாழ்வோம்.
நன்றி !!!!!!!!