பாணாவரம் அருகே ரயில் தண்ட வாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் மகேந் திரவாடி ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் தண்டவாளத்தில் கிடப்பதாக பாணாவரம் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காட்பாடி ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு 40 வயது இருக்கும். வடமாநிலத்தவராக இருக்கலாம் என தெரிகிறது. நீலநிறத்தில் டிராக் பேண்ட் அணிந்திருந்தார். மற்றபடி விவரங்கள் தெரியவில்லை.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காட்பாடி ரயில்வே போலீசார், இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.