Liquor stores ordered to close tomorrow ahead of Mahavir Jayanti


ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் நாளை (வியாழக்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மூடி வைக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது.

மீறி விற்பனை செய்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிய வந்தால், மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்கள் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதுக்கூட உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்தார்.