குறள் : 732
பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு
மு.வ உரை :
மிக்க பொருள் வளம் உடையதாய் எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய் மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.
கலைஞர் உரை :
பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்.
சாலமன் பாப்பையா உரை :
மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு.
Kural 732
Perumporulaal Pettakka Thaaki Arungettaal
Aatra Vilaivadhu Naatu
Explanation :
A kingdom is that which is desire for its immense wealth and which grows greatly in prosperity being free from destructive causes.
Horoscope Today: Astrological prediction for April 26, 2022
இன்றைய ராசிப்பலன் - 26.04.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
26-04-2022, சித்திரை 13, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி இரவு 12.48 வரை பின்பு தேய்பிறை துவாதசி. சதயம் நட்சத்திரம் மாலை 04.56 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 26.04.2022 | Today rasi palan - 26.04.2022
மேஷம்
இன்று தொழில் வளர்ச்சிகாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும்.
ரிஷபம்
இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் இருக்கும் நெருக்கடிகள் சற்று குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
கடகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை கொடுப்பது, அல்லது கடன் பெறுவதை தவிர்ப்பது உத்தமம். வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிம்மம்
இன்று குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். அரசு துறை ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். போட்டி பொறாமைகள் குறையும். சேமிப்பு உயரும்.
கன்னி
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.
துலாம்
இன்று வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் சற்று குறையும். எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். உத்தியோகத்தில் எளிதில் முடியும் காரியங்கள் கூட காலதாமதமாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் நல்லது நடக்கும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
மகரம்
இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். எதிர்பார்த்த உதவி கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்
இன்று உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கல் சாதகமாக இருக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001