குறள் : 723

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத் தஞ்சா தவர்

மு.வ உரை :

பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர் கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.

கலைஞர் உரை :

அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.

சாலமன் பாப்பையா உரை :

பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார்.

Kural 723

Pakaiyakaththuch Chaavaar Eliyar Ariyar
Avaiyakaththu Anjaa Thavar

Explanation :

Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).

Horoscope Today: Astrological prediction for April 17, 2022


இன்றைய ராசிப்பலன் - 17.04.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

17-04-2022, சித்திரை 04, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி இரவு 10.02 வரை பின்பு தேய்பிறை துதியை. சித்திரை நட்சத்திரம் காலை 07.16 வரை பின்பு சுவாதி நட்சத்திரம் பின்இரவு 05.33 வரை பின்பு விசாகம். சித்தயோகம் பின்இரவு 05.33 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். 

இராகு காலம்

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசிப்பலன் - 17.04.2022 | Today rasi palan - 17.04.2022,

மேஷம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் தாமதமாகவே செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் சிறுசிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

ரிஷபம்

இன்று உங்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமான பலனை தரும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலம் உண்டாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

கடகம்

இன்று உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரிக்க கூடும். குடும்ப பிரச்சினைகளுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உள்ள மந்த நிலை சற்று குறையும்.

சிம்மம்

இன்று பிள்ளைகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கூடும். உங்களின் சாதூரியமான பேச்சால் வியாபாரத்தில் வளர்ச்சி அடைய கூடிய வாய்ப்புகள் உருவாகும். உற்றார் உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினை குறையும். எதிர்பாராத உதவி கிட்டும்.

கன்னி

இன்று- வியாபாரத்தில் கூட்டாளிகளால் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றி சேமிப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை சமாளிக்க முடியும். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது. 

துலாம்

இன்று குடும்பத்தில் புத்திர வழியில் சுப செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். புதிய முயற்சிகளில் தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கொடுத்த கடன் வசூலாகும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

தனுசு

இன்று உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு சிறப்பாக இருக்கும். பழைய கடன்கள் பைசலாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

மகரம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளி இடங்களுக்கு செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். 

கும்பம்

இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். தூர பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பணவிஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தூர பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது உத்தமம்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001