குறள் : 721
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
மு.வ உரை :
சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர் அவைக்களத்தின் வகையினை அறிந்து வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.
கலைஞர் உரை :
சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை :
சொல்லின்வகைகளை அறிந்துமனத்தால் சுத்தமானவர்கள், கற்றவர் அவை, கல்லாதவர் அவை என அறிந்து பேசும்போது, பயத்தால் சொல் குற்றப்படமாட்டார்கள்.
Kural 721
Vakaiyarindhu Vallavai Vaaisoraar Sollin
Thokaiyarindha Thooimai Yavar
Explanation :
The pure who know the class ification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body.
Horoscope Today: Astrological prediction for April 15, 2022
இன்றைய ராசிப்பலன் - 15.04.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
15-04-2022, சித்திரை 02, வெள்ளிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 02.25 வரை பின்பு பௌர்ணமி. உத்திரம் நட்சத்திரம் காலை 09.35 வரை பின்பு அஸ்தம். சித்தயோகம் காலை 09.35 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 15.04.2022 | Today rasi palan - 15.04.2022
மேஷம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். வங்கி சேமிப்பு உயரும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிட்டும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினை குறையும்.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் பெற்றோரின் ஆதரவு கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
கடகம்
இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் அன்புடன் பழகுவார்கள். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய நபர்கள் அறிமுகம் கிட்டும். தொழிலில் பணியாட்கள் தங்கள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் மனகவலைகள் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். வியாபாரத்தில் சிறுசிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.
கன்னி
இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வெளிக்கடன்கள் இன்று வசூலாகும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
துலாம்
இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக நெருக்கடிகள் நிலவும். ஆடம்பர பொருட்களால் வீண் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களால் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழிலில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு
இன்று உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமின்றி கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் பண நெருக்கடி உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வியாபாரம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரியங்களையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
மீனம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். வருமானம் பெருகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001