குறள் : 716
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
மு.வ உரை :
விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல் ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.
கலைஞர் உரை :
அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்.
சாலமன் பாப்பையா உரை :
பலதுறை நூல்பொருள்களைக் கேட்டு உணரும் திறம் மிக்கவர்முன்னே ஆற்றல்மிக்க பேச்சாளன் சொல்லால் சிறுமைப்படுவது மேலான நெறியிலிருந்து நிலைதவறி விழுவதைப் போல ஆகும்.
Kural 716
Aatrin Nilaidhalarn Thatre Viyanpulam
Etrunarvaar Munnar Izhukku
Explanation :
(For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue).
Horoscope Today: Astrological prediction for April 10, 2022
இன்றைய ராசிப்பலன் - 10.04.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம்
10-04-2022, பங்குனி 27, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி பின்இரவு 03.16 வரை பின்பு வளர்பிறை தசமி. நாள் முழுவதும் பூசம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. ஸ்ரீ ராம நவமி. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம்
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
Today rasi palan - 10.04.2022 | இன்றைய ராசிப்பலன் - 10.04.2022
மேஷம்
இன்று கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல்நிலை சீராக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். செலவுகள் குறைத்து கொள்வது நல்லது. தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் வெற்றி தரும்.
மிதுனம்
இன்று பிள்ளைகளால் மன அமைதி குறையும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் கிட்டும். எந்த விஷயத்திலும் நிதானம் தேவை.
கடகம்
இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சிம்மம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். நண்பர்களின் சந்திப்பு மன நிம்மதியை தரும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை. திருமண சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். சுபகாரியங்கள் கைக்கூடும்.
துலாம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் உங்களுக்கு மனநிறைவை தரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் வருமானம் பெருகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு உடன் பிறந்தவர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். எந்த செயலையும் சற்று சிந்தித்து செய்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேசும் பொழுது நிதானத்தை கடை பிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
மகரம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விஷயமாக வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.
கும்பம்
இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
மீனம்
இன்று உறவினர்கள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். குடும்பத்துடன் தெய்வ தரிசனத்திற்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,