Farmers Grievance Meeting


ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, பட்டு வளர்ச்சி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுப்பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம். விவசாயிகள் தங்கள் விவரங்களை காலை 9.30 மணிக்கு பதிவு செய்திட வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.