Coimbatore Intercity Express train canceled


சென்னை- காட்பாடி இடையே கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரக்கோணம் தண்டவாள பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவையில் இருந்து சென்னை செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12680) இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் காட்பாடி-சென்னை சென்டிரல் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதனால் அந்த ரெயில் கோவையில் இருந்து சேலம் வழியாக காட்பாடி ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இதேபோல் சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12679) இன்று, நாளை மற்றும் 26,27 ஆகிய தேதிகளில் சென்னை சென்டிரல் முதல் காட்பாடி வரை ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக இந்த ரெயில் காட்பாடியில் இருந்து கோவைக்கு இயக்கப்படுகிறது.

இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.