Awareness rally on the event of World Health Day

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டையில் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள், பொது மக்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முத்துக்கடையில் இருந்து தொடங்கிய பேரணி ராணிப்பேட்டை முக்கிய சாலைகளின் வழியாக சென்றது.

இதில் தி.மு.க. மாநில சுற்று சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ஸ்கடர் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அன்பு சுரேஷ் ராவ், செவிலியர் கண்காணிப்பாளர் சுகந்தி, தி.மு.க.மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.