Agni Natchathiram 2022 Starts on 4h May | Kathiri Veyil
Agni Natchathiram Start and End Date 2022
அக்னி நட்சத்திரம் வரும் மே 4ந்தேதி தொடங்கி மே 28ந் தேதி வரை உள்ளது.
வெப்பம் சற்று அதிகமாக வே இருக்கும். இந்த நாட்களில் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
மேலும் நம் முன்னோர்கள் இந்த நாட்களில் சில நிகழ்ச்சிகள் நடத்தலாம். சில நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என வகுத்துள்ளார்கள். அவைகள் எல்லாமே விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ந்து வகுத்துள்ளார்கள்.
அக்னி நட்சத்திரம் 2022 - என்னவெல்லாம் செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? Agni Nakshathram- Do's & Don'ts
எவையெல்லாம் செய்யலாம்:
நிச்சயதார்த்தம், பூணூல் போடுதல், மஞ்சள் நீராட்டு விழா, திருமண பெண் பார்ப்பு, வளைகாப்பு, யாகங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தலாம் என முன்னோர்கள் வகுத்துள்ள.
கீழே செய்யக்கூடாத நிகழ்வுகள்.
செடி, கொடி, மரங்களை வெட்டவே கூடாது. அவைகள் செழிப்பாக வளரக்கூடியது அக்னி நட்சத்திர காலத்தில்தான்.
காது குத்துதல் கூடாது. கிரகப் பிரவேசம் கூடாது. வீடு கட்ட பூமி பூஜை கூடாது. நிலம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. புதுத் தொழில் தொடங்குவதை தவிர்ப்பது நல்லது.
கும்பாபிசேகம் கூடாது.
மரம் செடி கொடிகள் இந்த அக்னி நட்சத்திரத்தில்தான் தனக்கு வேண்டிய பச்சையத்தை வெயிலிலிருந்து அதிகமாக பெற்றுக் கொள்ளுகிறது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மனிதர்களுக்கு நன்மையும் செய்கிறது. சிறுநீரகம்தான் ரத்த்தத்திலுள்ள அழுக்கைப் பிரித்து சிறு நீராக வெளியேற்றுகிறது. தொடர்ந்து சிறு நீரகம் செயல் படுவதால் அதற்கு பாதிப்பு ஏற்படாமல் சிறிது ஓய்வு கொடுப்பது இந்த அக்னி நட்சத்திரக் காலத்தில்தான். இக்காலங்களில் *சிறு நீர் மூலமாக வெளியேற்றும் நீரைக் குறைத்து வியர்வை அதிகரிப்பு மூலமாக அழுக்கை வெளியேற்றுவதால்* சிறு நீரகத்துக்கு சற்று ஓய்வு கிடைக்கிறது.
அதிக கனிகள், காய்கள் விளைச்சல் அதிகமாக இருப்பது இக்காலங்களில்தான்.
குளிர்ச்சியை தரக் கூடிய கரும்புச்சாறு , எலுமிச்சை, வெள்ளரி போன்ற குளிர்ச்சியான பொருட்கள் அதிகமாக விளைவது இக்காலங்களில்தான்.
வியர்வை அதிகமாக வெளியேறுவதால் வரும் சூட்டைத் தணிக்க இவைகளை நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.