ஆற்காட்டில் தொடர்ந்து கஞ்சா விற்ற் வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை செய்து வந்த நபர்களை பிடிக்க ராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்யன் உத்தர விட்டார். அதன்பேரில் டிஎஸ்பி பிரபு மேற்பார் வையில் ஆற்காடு டவுன் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த தனிப்ப டையினர் கடந்த மாதம் 1ம் தேதி தோப்புக்கானா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது. அங்கிருந்த ஆற்காடு கனகசபாபதி தெருவை சேர்ந்த குமரேசன்(24) என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அவரது தொடர் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்பி தீபா சத்யன் பரிந்துரையின் பேரில்,குமரேசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று உத்தரவிட்டார். குமரேசன் மீது ஆந்திர மாநிலத்திலும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.