கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

Special buses from major cities to pick up youths for tomorrow's employment camp in Ranipet



வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் லாலாப்பேட்டை ஜி.கே. உலகப்பள்ளி ஆகியவை இணைந்து படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் வேலை பெறும் நோக்கில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (12ம் தேதி) காலை 8 மணி முதல் மாலை 3 மணிவரை அம்மூர்-லாலாப்பேட்டை சாலையில் உள்ள ஜி.கே. உலகப்பள்ளியில் நடைபெற உள்ளது.

இந்தமுகாமில் டாடா எலக்ட்ரானிக்ஸ், டிவிஎஸ் குரூப்ஸ், ஹூண்டாய் ஸ்டீல்ஸ், சேன்ட் கோபேன். அப்பல்லோ ஆஸ்பிட்டல்ஸ்&பார்மசி, எம் எம் போர்ஜிங்ஸ், திருமலை கெமிக்கல்ஸ், இந்திரா இன்டஸ்ட்ரீஸ் மற்றும் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் உட்பட 150க்கும் மேற்பட்ட தனியார்துறை முன்னனி நிறுவனங்கள்‌ கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து பணிநியமனம்‌ செய்ய உள்ளனர்‌. 

இந்தவேலைவாய்ப்பு முகாமில்‌ கிராமப்புற மற்‌ றும்‌ நகர்புற பகுதிகளில்‌ உள்ள 18 வயது முதல்‌ 40 வயது வரை உள்ள படித்த அண்‌, பெண்‌கள்‌, 5ம்‌ வகுப்பு முதல்‌ 10ம்‌ வகுப்பு 12ம்‌ வகுப்பு, ஐடிஐ. டிப்ளமோ, டிகிரி, பிஇ, எம்பிஏ உள்ளிட்ட கல்வி தகுதிகளை உடைய வேலைநாடுவோர்‌ கலந்‌துகொண்டு தங்களுக்கு தேவையான வேலையை தேர்வு செய்து பயன்பெறலாம்‌. விருப்பம்‌ உள்ளவர்‌கள்‌ பாஸ்போர்ட்‌ சைஸ்‌ புகைப்படம்‌, பயோ டேட்டா, அனைத்து கல்வி சான்றுகளுடன்‌ முகாமில்‌ பங்கேற்க வேண்டும்‌. இதற்கென தனித்தனியாக அரங்குகள்‌ அமைக்கப்பட்டுள்‌ளன. 

ராணிப்‌ பேட்டையில்‌ நாளை நடைபெரும்‌ மாபெரும்‌ வேலை வாய்ப்பு முகாமிற்கு இளைஞர்களை அழைத்‌துவர அரசு போக்குவரத்து கழகம்‌ சார்பில்‌ அரக்கோணம்‌, சோளிங்‌கர்‌, நெமிலி, அம்மூர்‌, ஆற்காடு, திமிரி, கலவை, ராணிப்பபட்டை, முத்துகடை, வாலாஜா பஸ்‌ நிலையம்‌, அம்மூர்‌ ரயில்‌ நிலையம்‌ ஆகிய பகுதிகளில்‌ இருந்து காலை 6 மணிமுதல்‌ சிறப்பு பஸ்கள்‌ இயக்கப்படும்‌. எனவே, படித்தவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ இந்த மாபெரும்‌ வேலைவாய்ப்பு முகாமில்‌ பங்கேற்று பயன்பெற வேண்டும்‌. இவ்வாறு அதுல்‌ கூறப்பட்டுள்ளது. 

பாக்ஸ்‌: 30 நிமிட இடைவெளியில்‌ பஸ்கள்‌.

இயக்கம்‌ ராணிப்‌பேட்டை ஜி.கே.உலகப்பள்ளியில்‌ நாளை நடைபெபறும்‌ வேலைவாப்ப்பு முகாமிற்கு இளைஞர்களை அழைத்து வர சிறப்பு பஸ்கள் காலை 6 மணி முதல் 30 நிமிடகால இடைவெளி யில் இயக்கப்பட உள்ளது. வாலாஜா, முத்துகடை, ஆற்காடு, மேல்விஷாரம், திமிரி, கலவை ஆகிய பகு திகளுக்கு 30 நிமிடங்கள் கால இடைவெளியில்பஸ்கள் இயக்கப்பட உள்ளது. சோளிங்கரில் இருந்து 15 நிமிட இடைவெளியிலும், அரக்கோணம். நெமிலி ஆகிய பகுதிகளில் இருந்து 45 நிமிடங்கள் இடைவெளியிலும், அம்மூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் வரும் நேரங்களில் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.