Newly Married girl killed by electric shock
ஆற்காடு குட்டைக்கரை தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ். கடலூரில் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பேபிஷாலினி(20). திருமணமாகி 9 மாதமாகிறது. பேபிஷாலினி ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று பேபிஷாலினி குளிப்பதற்காக பக்கெட்டில் தண்ணீரை நிரப்பி ஹீட்டர் மூலம் வெந்நீர் காயவைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின் சாரம் தாக்கியது. இதில் தூக்கிவீசப்பட்ட பேபி ஷாலினியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபாக இறந்தார்.
தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் வழக் குப்பதிவு செய்தார். திருமணமாகி 9 மாதமே ஆவ தால் ராணிப்பேட்டை ஆர்டிஓ பூங்கொடி விசாரணை நடத்தி வருகிறார்.