ராணிப்பேட்டை நகராட் சிக்குட்பட்ட முத்துக்கடை பகுதியில் உள்ள நகராட்சி கடைகளில் பல மாதங்களாக கடை வாடகை செலுத்தா மல் சிலர் இருந்து வந்தனர்.
இந்நிலையில் முத்துக்கடையில் இருந்த நகராட்சிக்கு சொந்தமான 3 கடைகளுக்கு ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் பி.ஏகராஜ் தலைமையில் நகராட்சி மேலாளர் தனலட்சுமி, நகராட்சி சுகாதார அலுவலர் அப்துல் ரஹீம், வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு) வெங்கடேசன், இளநிலை உதவியாளர்கள் வெங்கடேசன். ஜோயல், அலுவலக உதவியாளர் புருஷோத் உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடியாக பூட்டி சீல் வைத்தனர்.