Kaveripakkam: Rs 6 lakh fraud: Accountant suspended


சென்னையிலில் இருந்து வந்த ஊரக வளர்ச்சிப் பிரிவு தணிக்கை அலுவலகர்கள் கடந்த மாதம், ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலவலகத்தில் தணிக்கை செய்தனர். அதில், இங்கு கணக்காளராக பணியாற்றி வந்த வெங்கடேசன், 50, என்பவர் போலி வவுச்சர்கள் தயாரித்து செலவு கணக்குகள் காண்பித்து 2019-20 ம் ஆண்டு 6 லட்சம் ரூபாய் மோசடி செய்ததும், இதற்காக வட்டாள வளர்ச்சி அலுவலக கணக்கில் இருந்து அவரது நண்பர்கள் கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டு பின்னர் அவர்களிடமிருந்து இவரது வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டு மோசடி செய்தது தெரியவந்தது.

மேலும் இவர் ஏற்கனவே பணியாற்றிய அரக்கோணம், திமிரி வட்டாள வளர்ச்சி அலுவலகத்திலும் இதே போல 30 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கணக்காளர் வெங்கடேசனை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இன்று உத்தரவிட்டார். இவர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்த ஊரக வளர்ச்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.