குறள் : 705
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்
மு.வ உரை :
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால் ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும்.
கலைஞர் உரை :
ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி விடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்?.
சாலமன் பாப்பையா உரை :
ஒருவன் குறிப்பைக் கண்ட பின்பும் அவன் மனக்கருத்தை அறியமுடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்களால் என்ன நன்மை?.
Kural 705
Kurippir Kurippunaraa Vaayin Uruppinul
Enna Payaththavo Kan?
Explanation :
Of what use are the eyes amongst ones members if they cannot by their own indications dive those of another ?.
Horoscope Today: Astrological prediction for March 30, 2022
இன்றைய ராசிப்பலன் - 30.03.2022
இன்றைய பஞ்சாங்கம்
30-03-2022, பங்குனி 16, புதன்கிழமை, திரியோதசி திதி பகல் 01.19 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. சதயம் நட்சத்திரம் பகல் 10.48 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் பகல் 10.48 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
Today rasi palan - 30.03.2022 | இன்றைய ராசிப்பலன் - 30.03.2022
மேஷம்
இன்று உங்களுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்பாக இருப்பீர்கள். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். கடன்கள் ஓரளவு குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணிச்சுமை குறையும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகலாம். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.
கடகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.
சிம்மம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எந்த விஷயத்திலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். நினைத்த காரியம் எளிதில் முடியும்.
துலாம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணிமாற்றம், இடமாற்றம் பற்றி யோசிப்பார்கள். சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடையலாம். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சி வெற்றி தரும்.
தனுசு
இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மகரம்
இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தினருடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் உதவியால் வியாபார ரீதியான பிரச்சினைகள் தீரும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திழதுழழந்ந்ருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது உத்தமம். உடன் பிறந்தவர்கள் இன்று உறுதுனையாக இருப்பார்கள்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,