குறள் : 688

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு

மு.வ உரை :

தூய ஒழுக்கம் உடையவனாதல் துணை உடையவனாதல் துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

கலைஞர் உரை :

துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.

சாலமன் பாப்பையா உரை :

பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு.

Kural 688

Thooimai Thunaimai Thunivutaimai Immoondrin
Vaaimai Vazhiyuraippaan Panpu

Explanation :

The qualifications of him who faithfully delivers his (sovereigns) message are purity the support (of foreign ministers) and boldness with truthfulness in addition to the (aforesaid) three.

Horoscope Today: Astrological prediction for March 13, 2022

இன்றைய ராசிப்பலன் - 13.03.2022


இன்றைய பஞ்சாங்கம்

13-03-2022, மாசி 29, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி பகல் 10.22 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 08.05 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம்

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

Today rasi palan - 13.03.2022 | இன்றைய ராசிப்பலன் - 13.03.2022

மேஷம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷபம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் மன அமைதி குறையும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவிகள் கிடைக்கும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.

கடகம்

இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் கவனம் தேவை. கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

சிம்மம்

இன்று உங்கள் உள்ளம் மகிழும் இனிய செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். உறவினர்கள் உதவியுடன் சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சிலருக்கு ஆன்மீக பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

கன்னி

இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைக்கூடும்.

துலாம்

இன்று நீங்கள் சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. தொழில் ரீதியாக வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும்.

விருச்சிகம்

இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தினருடன் வீண் பிரச்சினைகள் ஏற்படும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். உங்கள் ராசிக்கு பகல் 01.30 வரை சந்திராஷடமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. கோபத்தை குறைத்து கொள்வது நல்லது.

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு பகல் 01.30 க்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தடைப்படும். மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். சுபகாரியங்கள் மற்றும் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

மகரம்

இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். கடன் பிரச்சினைகள் குறையும்.

கும்பம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். நவீனகரமான பொருட்களை வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

மீனம்

இன்று தேவையற்ற பிரச்சினைகளால் குடும்பத்தில் நிம்மதி குறையும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology. 
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,