குறள் : 683

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு

மு.வ உரை :

அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

கலைஞர் உரை :

வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை :

அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.

Kural 683

Noolaarul Noolvallan Aakudhal Velaarul
Vendri Vinaiyuraippaan Panpu

Explanation :

To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks to lancebearing kings on matters of triumph (to his own sovereign).

Horoscope Today: Astrological prediction for March 07, 2022

இன்றைய ராசிப்பலன் - 08.03.2022


இன்றைய பஞ்சாங்கம்

08-03-2022, மாசி 24, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி இரவு 12.31 வரை பின்பு வளர்பிறை சப்தமி. நாள் முழுவதும் கிருத்திகை நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டி - கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம்

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

Today rasi palan - 08.03.2022 | இன்றைய ராசிப்பலன் - 08.03.2022


மேஷம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். பெண்கள் நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப வாய்ப்புகள் அமையும்.

ரிஷபம்

இன்று எந்த செயலையும் செய்து முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிலும் நிதானம் தேவை.

மிதுனம்

இன்று குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். 

கடகம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பூர்வீக சொத்து விஷயமாக அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

சிம்மம்

இன்று நீங்கள் சற்று சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் கிட்டும்.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு பகல் 12.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் குழப்பம், தேவையற்ற கவலை உண்டாகும். உத்தயோகத்தில் வீண் சிக்கல்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான பிரச்சினைகளில் மதியத்திற்கு பிறகு மன அமைதி கிட்டும்.

துலாம்

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு பகல் 12.30 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவர். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

தனுசு

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும்.

மகரம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைப்பதில் சில தடைகள் ஏற்படலாம். எதையும் யோசித்து செய்வது நல்லது. உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்களின் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். புத்திர வழியில் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அலைச்சலுக்குப் பின் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,