குறள் : 680
உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற்
கொள்வர் பெரியார்ப் பணிந்து
மு.வ உரை :
வலிமை குறைந்தவர் தம்மை சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காக தாம் அஞ்சி வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர்.
கலைஞர் உரை :
தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை :
சிறிய இடத்தில் வாழ்பவர், தம்மிலும் பெரியவர் எதிர்த்து வரும்போது அவரைக் கண்டு தம்மவர் நடுங்குவதற்கு அஞ்சி அப்பெரியவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர்.
Kural 680
Uraisiriyaar Ulnatungal Anjik Kuraiperin
Kolvar Periyaarp Panindhu
Explanation :
Fearing their peoples inner apprehensions Men of minor realms bow before mightier rulers accepting terms.
Horoscope Today: Astrological prediction for March 05, 2022
இன்றைய ராசிப்பலன் - 05.03.2022
இன்றைய பஞ்சாங்கம்
05-03-2022, மாசி 21, சனிக்கிழமை, திரிதியை திதி இரவு 08.36 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 02.29 வரை பின்பு அஸ்வினி. பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 02.29 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2.
இராகு காலம்
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
Today rasi palan - 05.03.2022 | இன்றைய ராசிப்பலன் - 05.03.2022
மேஷம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றி மன அமைதி குறையலாம். நண்பர்கள் ஆறுதலாக இருப்பார்கள். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். வேலையில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும்.
ரிஷபம்
இன்று உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். உத்தியோக ரீதியாக பெரிய மனிதர்களுடன் சந்திப்பு ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும்.
மிதுனம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பணப்பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும்.
கடகம்
இன்று உங்களுக்கு நெருங்கியவர்களால் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
சிம்மம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். சுபகாரியங்களையும் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை.
கன்னி
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை கூடும்.
துலாம்
இன்று வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். மனைவி வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சிறு தொகை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். குடும்பத்தில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் உதவியுடன் சுமூகமாக முடியும்.
தனுசு
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று மந்தமாகவே இருக்கும். பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு உண்டாகும். நவீன பொருட்கள் வாங்குவதில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் ஏற்படும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
மகரம்
இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
கும்பம்
இன்று உறவினர்களால் வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொண்டால் உயர்வு கிட்டும்.
மீனம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். அசையா சொத்துக்களால் அனுகூலம் உணடாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவதன் மூலம் லாபம் பெருகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,