திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்து வரும் திட்டங்கள் பொது மக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பெண்களுக்கு இலவசம் :


ஜூலை 8 ஆம் தேதி முதல் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு பயணச்சீட்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதில், மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பெண்கள் பயணம் மேற்கொண்டு வருவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

ஆண்களுக்கும் இலவச பயணம் :


'தமிழக அரசு பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை உறுதி செய்துள்ளதை தொடர்ந்து, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து ஏழை ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ள அங்கீகாரத்துடன் கூடிய இலவச பேருந்து பயணத்தை உறுதி செய்ய வேண்டும்' என்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்து உள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி பெண்களுக்கு உள்ளது போல, ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் பற்றி முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாகவும், அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.