ராணிப்பேட்டையை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட குடிநீர் வழங்கும் பம்ப்ஹவுஸ் சீகராஜபுரம் தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி பொன்னையாற்றோரம் அமைந் துள்ளது. இந்த பம்ப் ஹவு சிலிருந்து நரசிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட மலைமேடு எம்ஜிஆர் நகர் மலைமேடு மேற்கு கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு தினமும் பொன்னையாற்றில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. அதிகாலை 4மணி முதல் இரவு 8 மணி வரை மின் மோட்டார் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவது வழக்கம்.
அதன்படி நேற்றுமுன் தினம் காலை மின் மோட்டாரை இயக்க ஸ்விட்ச் ஆன் செய்தபோது மின்மோட்டார் இயங்க வில்லை. இதுகுறித்து ஆபரேட்டர் மணிகண்டன், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்ட போது. 300 மீட்டர் காப்பர் மின் ஒயர் திருட்டு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ₹1 லட்சம் என அதிகாரிகள் தெரி விக்கின்றனர். இதனால் 2 நாட்களாக பொதுமக்கள் குடிநீர்இன்றிசிரமப்பட்டு வருகின்றனர்.