காவேரிப்பாக்கம் 
நெமிலி அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருத்த பாண்டியன். இவரது மனைவி சுசீலா (45). இவர் காஞ்சிபுரம் ரோடு அருகே பங்க் கடை நடத்தி வருகிறார்.

இவர் அரசால் தடைசெய்யப்பட்ட எம்டிஎம் போதை பாக்கு விற்பனை செய்யப்படுவதாக நெமிலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து 
சப் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் உள்ளிட்ட போலீசார் பங்க் கடையில் சோதனை செய்தபோது 20 பாக்கெட் எம்டிஎம் போதை பாக்கை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.