வாலாஜா-முகுந்தராயபுரம் ரயில் மார்க்கத்தில் 40 வயது மதிக்கத்தக்கவாலிபரின் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா- முகுந்தராயபுரம் ரயில் நிலையத்திற்கும் இடையே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக முகுந்தராயபுரம் ரயில்வே காவல் நிலையத்திற்கு நேற்று அவ்வழியாக சென்றவர் ஒருவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் காட்பாடி ரயில்வே காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்ரா உத்தரவின்பேரில், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் முரளி மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனர்.
பின்னர். பிரேத பரி சோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விசாரணை நடத்தியதில் ரயில்வே தண்டவாளத்தை கடந்த போது சென்னையிலிருந்து காட்பாடி வழியாக சென்ற ஏதோ ஒரு ரயில் மோதி இறந்தது தெரிய வந்தது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற தகவல் தெரிய வில்லை.
மேலும். இறந்தவர் கத்தரிப்பூகலரில் வெள்ளை கோடு போட்ட முழுக்கைச் சட்டையும். வெள்ளை நிற வேட்டியும் அணிந்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.