ராணிப்பேட்டை மாவட்டத்தில் அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப் பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு உயர்கல்வித்துறை சார்பில் கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து பல பயனுள்ள புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிக்கொண ரும் விதத்தில் 2018-19ம் ஆண்டு முதல் தமிழக அரசின் ஊரக கண்டுபிடிப்பாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2020-21ம் ஆண்டிற்கான ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருது வழங்க முன்மொழிவுகள் அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பபடிவம் மற்றும் விருது தொடர்பான அனைத்து செய்திகளும் www.sciencec-itychennai.in என்ற வளைதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மூலமாக விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்பிக்க இம்மாதம் 7ம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.