குறள் : 693
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது
மு.வ உரை :
( அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும் ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.
கலைஞர் உரை :
தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள். பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும். அப்படி செய்துவிட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல.
சாலமன் பாப்பையா உரை :
ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காக்கக் கருதினால் மோசமான பிழைகள் தம் பங்கில் நேர்ந்து விடாமல் காக்க; பிழைகள் நேர்ந்துவிட்டதாக ஆட்சியாளர் சந்தேகப் பட்டுவிட்டால் அவரைத் தெளிவிப்பது எவர்க்கும் கடினம்.
Kural 693
Potrin Ariyavai Potral Katuththapin
Thetrudhal Yaarkkum Aridhu
Explanation :
Ministers who would save themselves should avoid (the commission of) serious errors for if the kings suspicion is once roused no one can remove it.
Horoscope Today: Astrological prediction for March 18, 2022
இன்றைய ராசிப்பலன் - 18.03.2022
இன்றைய பஞ்சாங்கம்
18-03-2022, பங்குனி 04, வெள்ளிக்கிழமை, பௌர்ணமி திதி பகல் 12.47 வரை பின்பு தேய்பிறை பிரதமை. உத்திரம் நட்சத்திரம் இரவு 12.17 வரை பின்பு அஸ்தம். சித்தயோகம் இரவு 12.17 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பங்குனி உத்திரம். முருக வழிபாடு நல்லது.
இராகு காலம்
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
Today rasi palan - 18.03.2022 | இன்றைய ராசிப்பலன் - 18.03.2022
மேஷம்
இன்று உங்களின் பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் உடன்பிறந்தவர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் வீண் விரயங்கள் உண்டாகும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உற்றார் உறவினர்களின் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறைந்து மன மகிழ்ச்சி ஏற்படும்.
கடகம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் தோன்றி மறையும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன் கிட்டும்.
சிம்மம்
இன்று நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை உண்டாகும். நெருங்கியவர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.
கன்னி
இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களோடு ஒற்றுமையாக செயல்பட்டு நற்பலன் அடைவீர்கள். உற்றார் உறவினர்களால் ஆதாயங்கள் உண்டாகும்.
துலாம்
இன்று உங்களுக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்துக்களால் மனநிம்மதி குறையும். ஆரோக்கிய ரீதியாக சிறு தொகை செலவிட நேரிடும். வராத கடன்கள் எதிர்பாராத வகையில் வசூலாகும். வியாபார சம்பந்தமாக எடுக்கும் முயற்சியில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
விருச்சிகம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ற உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
மகரம்
இன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். எதிலும் நிதானம் தேவை.
கும்பம்
இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் தோன்றும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் காலதாமதம் ஏற்படும். மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது.
மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைகூடும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,