வேலுார் பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடக்கும் மாட்டு சந்தை பிரசித்தி பெற்றது. இங்கு ஆந்திர மாநிலம் மற்றும் அண்டை மாவட்டங்களான திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவண்ணாமலை மற்றும் உள்ளூர் பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மாடுகளை வாங்கவும், விற்கவும் வருவர்.
நேற்று நடந்த சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்தது. சந்தையில் மாடுகளின் வியாபாரம் கடந்த வாரத்தைவிட இந்த வாரம் சூடுபிடித்ததாக அங்கிருந்த பல வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சந்தையில் காய்கறி, விவசாயிகள் கருவிகள், சேவல், மளிகை பொருட்கள், மாடுகளுக்கு தேவையான கயிறுகள் என விற்பனை செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஒரு கோடி ரூபாய் வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.