👉 1944ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி மறைந்தார்.


பிறந்த நாள் :-


பேடன் பவல்

👮 தன்னலமற்ற மனித நேயப் பணியினை செய்ய சாரணர் இயக்கத்தை தொடங்கிய ராபர்ட் பேடன் பவல் பிரபு 1857ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார்.

👮 இவர் 1907ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோற்றுவித்தார். முதலில் சாரணியம் ஓர் சோதனை முயற்சியாக 20 சிறுவர்களுடன் தொடங்கியது. பிறகு தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது.

👮 உலகம் முழுவதும் இந்த இயக்கம் வெற்றிகரமாக கிளை விரித்தது. 28 நாடுகள் இவருக்கு பரிசுகளும், விருதுகளும் வழங்கி சிறப்பித்தது.

👮 சாரணியத்தின் தந்தை என அழைக்கப்படும் இவர் தனது 83வது வயதில் (1941) மறைந்தார்.


தில்லையாடி வள்ளியம்மை

🏁 ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை 1898ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிலுள்ள ஜோகானஸ்பேர்க் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் சொந்த ஊர் மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற ஊர் ஆகும்.

🏁 இவர் சிறுவயதிலேயே தன்னைச் சுற்றி நிகழும் சமுதாயப் போக்குகளை கவனித்து, ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட வரி மற்றும் பல்வேறு கொடுமைகளை எதிர்த்து காந்தியடிகளுடன் போராட்டங்கள் நடத்தினார்.

🏁 'சொந்த கொடிகூட இல்லாத நாட்டின் கூலிகளுக்கு இவ்வளவு வெறியா?' என்றார் ஓர் ஆங்கிலேய அதிகாரி. உடனே தனது சேலையைக் கிழித்து அந்த அதிகாரியின் முகத்தில் எறிந்த வள்ளியம்மை, 'இதுதான் எங்கள் தேசியக் கொடி' என்றாராம்.

🏁 பலன் கருதாமல் தியாக உணர்வுடன் போராடி வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை தன்னுடைய 16வது வயதில் (1914) தனது பிறந்தநாளன்றே மறைந்தார்.


ஜார்ஜ் வாஷிங்டன்

🌏 அமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் 1732ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் பிறந்தார்.

🌏 இவர் 1753ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். பிறகு 1775ஆம் ஆண்டு அமெரிக்கப் புரட்சியில் ராணுவத்தின் தலைமை தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

🌏 1783ஆம் ஆண்டு அமெரிக்க சுதந்திரப் போர் முடிந்தது. இவர் அர்ப்பணிப்பு உணர்வுடன் போரை நடத்தி வெற்றிக்குப் பெரும் பங்காற்றினார். மேலும் இவர் 1789ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அதிபராகப் பதவி ஏற்றார். 100 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரே அதிபர் இவர்தான்.

🌏 அமெரிக்க வரலாறே இவரிடம் இருந்துதான் தொடங்குவதாக கருதப்படும் பெருமைக்குரிய இவர் தனது 67வது வயதில் (1799) மறைந்தார்.


இன்றைய தின நிகழ்வுகள்


705 – பேரரசி வூசெத்தியான் முடிதுறந்தார், சீனாவில் தாங் அரசாட்சி ஆரம்பமானது.

1371 – இரண்டாம் இராபர்ட் இசுக்கொட்லாந்தின் அரசனாக முடி சூடினார்.

1495 – பிரான்சு மன்னர் எட்டாம் சார்லசு நாப்பொலியை அடைந்து அந்நகரைக் கைப்பற்றினார்.

1651 – செருமனியின் பிரீசியக் கரை வெள்ளப்பெருக்கினால் அழிந்தது. 15,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1658 – இடச்சுக்காரரினால் இலங்கையின் மன்னார் நகரம் கைப்பற்றப்பட்டது.[1][2]

1797 – பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பு வேல்சின் பிசுகார்டு நகரில் பிரெஞ்சுப் படைகளால் மேற்கொள்ளப்பட்டது.

1819 – எசுப்பானியா புளோரிடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றது.

1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: புவெனா-விஸ்டா நகரில் இடம்பெற்ற போரில் 15,000 மெக்சிக்கர்களை 5,000 அமெரிக்கப் படைகள் தோற்கடித்தன.

1848 – பாரிசில் லூயி பிலிப் மன்னனுக்கெதிரான பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அவன் முடி துறந்தான்.

1853 – வாசிங்டன் பல்கலைக்கழகம் எலியட் செமினறி என்ற பெயரில் மிசூரி, செயின்ட் லூயிசில்| ஆரம்பிக்கப்பட்டது.

1862 – ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசுத்தலைவராக அதிகாரபூர்வமாக வர்ஜீனியா, ரிச்மண்ட் நகரில் பொறுப்பேற்றார்.

1882 – சேர்பிய பேரரசு மீள உருவாக்கப்பட்டது.

1889 – அமெரிக்க அரசுத்தலைவர் குரோவர் கிளீவ்லாண்ட் வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, மொன்ட்டானா, வாசிங்டன் ஆகியவற்றை அமெரிக்காவின் மாநிலங்களாக அறிவிக்கும் சட்டமூலத்தில் கையெழுத்திட்டார்.

1899 – பிலிப்பைன்-அமெரிக்கப் போர்: பிலிப்பீனியப் படைகள் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக முதன் முதலாகத் தாக்குதலைத் தொடுத்தன. ஆனாலும், மணிலா நகரை அமெரிக்கர்களிடம் இருந்து கைப்பற்றத் தவறியது.

1907 – பேடன் பவல் முதலாவது சாரணிய முகாமை இங்கிலாந்தில் பிரவுன்சி என்ற இடத்தில் அமைத்தார்.

1909 – கனெடிக்கட் கப்பலின் தலைமையிலான 16 அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தமது உலகப் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பின.

1921 – உருசியப் படையினர் மங்கோலியாவில் இருந்து சீனர்களை வெளியேற்றி, போகடு கானை மங்கோலியாவின் பேரரசனாக அறிவித்தனர்.

1924 – கால்வின் கூலிஜ் வெள்ளை மாளிகையில் இருந்து வானொலி மூலம் உரையாற்றிய முதலாவது அமெரிக்கத் தலைவர் ஆனார்.

1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் ஐக்கிய அமெரிக்காவின் தோல்வியைத் தொடர்ந்து அமெரிக்கத் தளபதி டக்ளஸ் மக்கார்த்தரை வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பணித்தார்.

1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியில் சோபி சோல் உட்பட வெள்ளை ரோசா இயக்க உறுப்பினர்கள் மூவர் தூக்கிலிடப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க வான்படையினர் தவறுதலாக நான்கு இடச்சு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 800 இற்கும் அதிகமானோர் இறந்தனர்.

1958 – எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன.

1961 – உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்திற்கு கொங்கோவில் கொல்லப்பட்ட கறுப்பினத் தலைவர் பத்திரிசு லுமும்பாவின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.

1969 – பீட்டில்சின் அனைத்து அங்கத்தவர்களும் கடைசித் தடவையாக சேர்ந்து பாடல் பதிவில் ஈடுபட்டனர்.

1972 – அதிகாரபூர்வ ஐரியக் குடியரசு இராணுவம் இங்கிலாந்து, ஆம்ப்சயரில் உள்ள ஆல்டர்சொட் இராணுவப் பாசறையில் வாகனக் குண்டுவெடிப்பை நடத்தியது. ஏழு பேர் கொல்லப்பட்டு, 19 பேர் காயமடைந்தனர்.

1974 – பாக்கித்தான், லாகூரில், நடைபெற்ற இசுலாமியக் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் 37 நாடுகளும், 22 அரசுத்தலைவர்களும் பங்குபற்றினர். இம்மாநாட்டில் வங்காளதேசம் அங்கீகரிக்கப்பட்டது.

1974 – ரிச்சார்ட் நிக்சனைப் படுகொலை செய்யும் நோக்கில் வெள்ளை மாளிகை மீது மோதுவதற்காக வாசிங்டன் பன்னாட்டு விமான நிலையத்தில் விமானம் ஒன்றைக் கடத்த முற்பட்ட சாமுவேல் பிக் என்பவனை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.[3]

1979 – சென் லூசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1986 – பிலிப்பீன்சில் மக்கள் புரட்சி வெடித்தது.

1997 – டோலி என்ற ஆடு வெற்றிகரமாக படியெடுக்கப்பட்டதாக பிரித்தானிய அறிவியலாளர்கள் அறிவித்தனர்.

2002 – அங்கோலாவின் அரசியல் தலைவர் ஜொனாசு சவிம்பி இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.

2002 – இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் வவுனியாவில் கையெழுத்திடப்பட்டது.

2005 – ஈரானில் கெர்மான் மாகாணத்தில் 6.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 612 பேர் உயிரிழந்தனர்.

2006 – பிரித்தானியாவின் சரித்திரத்தில் மிகப் பெரும் கொள்ளை கெண்ட் நகரில் இடம்பெற்றது. £53 மில்லியன் பணத்தை அறுவர் சேர்ந்து கொள்ளையிட்டனர்.

2011 – நியூசிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச்சில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 185 பேர் உயிரிழந்தனர்.

2012 – அர்கெந்தீனா, புவெனஸ் ஐரிஸ் நகரில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 51 பேர் உயிரிழந்தனர், 700 பேர் காயமடைந்தனர்.

2014 – உக்ரைன் அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச்சுக்கெதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் 328–0 வாக்குகளால் வெற்றியடைந்தது.

2015 – பத்மா நதியில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் 70 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்


1302 – ஜெஜீன் கான், சீன யுவான் வம்சப் பேரரசர் (இ. 1323)

1732 – சியார்ச் வாசிங்டன், ஐக்கிய அமெரிக்காவின் 1வது அரசுத்தலைவர் (இ. 1799)

1785 – சான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே, பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1845)

1796 – அடால்ப் குவெட்லெட், பெல்சிய கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1874)

1810 – பிரடெரிக் சொப்பின், போலந்து இசையமைப்பாளர் (இ. 1849)

1824 – பியேர் ஜான்சென், பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1907)

1857 – பேடன் பவல், சாரணர் இயக்கத்தை ஆரம்பித்த ஆங்கிலேயர் (இ. 1941)

1857 – ஐன்ரிக் ஏர்ட்சு, செருமானிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (இ. 1894)

1879 – ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட், தென்மார்க்கு வேதியியலாளர் (இ. 1947)

1892 – எட்னா செயிண்ட். வின்சென்ட் மில்லாய், அமெரிக்கக் கவிஞர் (இ. 1950)

1898 – தில்லையாடி வள்ளியம்மை, இந்திய விடுதலைப் போராட்டப் பெண் போராளி (இ. 1914)

1923 – சுப்பையா சர்வானந்தா, இலங்கைத் தமிழ் நீதிபதி, வழக்கறிஞர், மேல்மாகாணத்தின் 1வது ஆளுநர் (இ. 2007)

1932 – எட்வர்ட் கென்னடி, அமெரிக்க அரசியல்வாதி (இ. 2009)

1936 – சாலமன் பாப்பையா, தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர், பேச்சாளர்

1951 – சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத், இலங்கைத் தமிழ்க் கல்வியாளர்

1953 – ஊ. பு. அ. சௌந்திரபாண்டியன், தமிழகத் தொழிலதிபர், அரசியல்வாதி (பி. 1893)

1956 – அசோக் அமிர்தராஜ், தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர், டென்னிசு வீரர்

1962 – இசுடீவ் இர்வின், ஆத்தியேலிய விலங்கியலாலர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் (இ. 2006)

1963 – விஜய் சிங், பிஜி-அமெரிக்க குழிப்பந்தாட்ட வீரர்

1974 – ஜேம்ஸ் பிளண்ட், ஆங்கிலேயப் பாடகர், கித்தார் இசைக்கலைஞர்

1975 – டுரூ பேரிமோர், அமெரிக்க நடிகை

இன்றைய தின இறப்புகள்


1072 – பீட்டர் தமியான், இத்தாலியப் புனிதர்

1512 – அமெரிகோ வெஸ்புச்சி, இத்தாலிய நாடுகாண் பயணி (பி. 1454)

1600 – என்றிக்கே என்றீக்கசு, போர்த்துக்கீச இயேசு சபை போதகர், மதப்பரப்புனர் (பி. 1520)

1913 – பேர்டினண்ட் டி சோசர், சுவிட்சர்லாந்து மொழியியலாளர் (பி. 1857)

1943 – சோபி சோல், செருமானிய செயற்பாட்டாளர் (பி. 1921)

1944 – கஸ்தூரிபாய் காந்தி, மகாத்மா காந்தியின் மனைவி (பி. 1869)

1958 – அபுல் கலாம் ஆசாத், இந்திய அரசியல்வாதி (பி. 1888)

1987 – அன்டி வார்ஹால், அமெரிக்க ஓவியர், புகைப்படக் கலைஞர் (பி. 1928)

2001 – வ. அ. இராசரத்தினம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1925)

2006 – எஸ். ராஜரத்தினம், சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (பி. 1915)

2012 – மரீ கோல்வின், அமெரிக்க ஊடகவியலாளர் (பி. 1956)

2012 – இரெமி ஓக்லிக்கு, பிரான்சிய ஊடகவியலாளர் (பி. 1983)

2019 – கருணா, ஈழத்து-கனடிய ஓவியர்

இன்றைய தின சிறப்பு நாள்


விடுதலை நாள் (செயிண்ட் லூசியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1979)