ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள சிறுவளையம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 48),
பனப்பாக்கம் அருகே உள்ள மேலபுலம் அரசு மேல் நிலைப்பள்ளியில் அலுவலக பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட 15-வது வார்டில் தேர்தல் அலுவலராக பணியில் ஈடுபட்டிருந்தார்.
மாலை தேர்தல் பணிமுடித்து வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். சோளிங்கர் அருகே சாலையில் இருந்த வளைவில் வாகனத்தை திருப்ப முயன்றபோது எதிர்பாராதவிதமாக எதிரே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.