Village of ranipet make traditional food and celebrate food festival
ராணிப்பேட்டை மாவட்டம் ,சோளிங்கர் அருகேயுள்ள வெங்குப்பட்டு கிராமத்தில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.
வெங்குப்பட்டு கிராமத்தில் ஊட்டச்சத்து உணவுகள் தயாரிக்கும் விழிப்புணர்வு போட்டி
ராணிப்பேட்டையில் நடைபெற்ற உணவுத்திருவிழாராணிப்பேட்டை மாவட்டம் ,சோளிங்கர் அருகேயுள்ள வெங்குப்பட்டு கிராமத்தில் 11 மகளிர் குழுக்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் தயாரிக்கும் விழிப்புணர்வு போட்டி வட்டார இயக்கம் சார்பில் நடைபெற்றது.இந்த ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிக்கு வட்டார இயக்க மேற்பார்வையாளர் அலமேலு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் ஒன்றிய குழு உறுப்பினர் வெங்குப்பட்டு ராமன் கலந்து கொண்டு நம் பாரம்பரிய உணவு கள் குறித்தும் .அதில் உள்ள ஊட்டச்சத்து குறித்தும். உணவுகளின் உள்ள நன்மைகளை எடுத்து கூறினார்.
வட்டார இயக்கம் சார்பில் 11 மகளிர் குழுக்கள் சமைத்த உணவு
தொடர்ந்து 11 மகளிர் குழுக்கள் தயாரித்து வைத்திருந்த ஊட்டச்சத்து உணவுகளை சுவைத்து, நம் பாரம்பரிய உணவு முறையில் செய்யப்பட்டிருந்த கம்பு அடை,தினை பொங்கல்,குதிரைவாலி உப்புமா உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
பாரம்பரியமும் சத்தும் நிறைந்த உணவு வகைகள்
இதில் மூன்று மகளிர் குழுக்களுக்கு வெற்றிப்பெற்றதாக அறிவித்தனர். முன்னதாக மகளிர் குழுக்களில் உள்ளபெண்கள் தங்கள் தயாரித்த உணவுகள் குறித்து அதில் உள்ள ஊட்டச்சத்து குறித்து விளக்கம் அளித்தனர். அப்போது இதில் மகளிர் குழு உறுப்பினர்கள் 50 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.