ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் பேஸ்-1 பகுதியில் தனியார் ஷீ தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.
தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கான யூனியன் அமைப்பதற்கான பணிகளை ஒரு சில தொழிலாளிகள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சாலை நிர்வாகம் தொழிற்சாலை உள்ளே யூனியன் அமைக்க கூடாது என பலமுறை அறிவுறுத்தியும் யூனியன் அமைக்க முயன்ற 4 தொழிலாளிகளை பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் யூனியன் அமைக்க முயன்ற 4 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்த தொழிற் சாலையை கண்டித்தும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாக பணி திரும்ப வழங்க வேண்டும் என கோரி தொழிற்சாலை முன்பு 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சிப்காட் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளிடம் தொழிற்சாலை நிர்வாகத் திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.