ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடந்த போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை எஸ்பி தீபா சத்யன் தொடங்கி வைத்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை முத்துக்கடையில் நேற்று போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. டிஎஸ்பி பிரபு, இன்ஸ்பெக்டர்கள் காண்டீபன்(வாலாஜா), லதா (திமிரி), வாசுகி (ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையம்) முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தை எஸ்பி தீபா சத்யன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முத்துக்கடை பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் எம் பிடி ரோடு, நவல்பூர் எம். எப்.ரோடு, புதிய பஸ் நிலையம், வண்டிமேடு சாலை, காந்தி ரோடு, பழைய பஸ் நிலையம், கிருஷ்ண கிரி டிரங்க் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக சென்று, ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. இந்த கொடி அணிவகுப்பு ஊர்வ லத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.