காவேரிப்பாக்கம் வட்டாரம் பெரும்புலிப்பாக்கம் கிராமத்தில் நேற்று விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகம் தலைமை தாங்கி பேசிய தாவது நெல் சாகுபடியில் அதிகளவு ஈடுபடும். இப்பகுதி விவசாயிகள், பாரம்பரிய ரகங்களை சாகுபடி செய்ய முன்வர வேண்டும். நெற்பயிருக்கு ரசாயன உரங்களுக்கு பதிலாக ஜீவாமிர்தம், மீன் அமிலம் மற்றும் கடலைப் புண்ணாக்கு கரைசல் ஆகியவற்றை 10 நாள் இடைவெளியில் வாய்மடையில் அளித்து, பயிருக்கு இடவேண்டும்.

கூடுதலாக பஞ்சகவ்யம், வேப்பம் புண்ணாக்கு, சூடாமோனாஸ் தெளிப்பு மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்திட பிலேரியா பெச்சியான, மெட்டடாரிசியம், அனி சோபிலியே போன்ற பூஞ்சான மருந்துகளை பயன்படுத்தி வீண் செலவுகளை தவிர்த்திட வேண்டும். மேலும், நெல்லுக்கு சூபோமோனாஸ்,டிரைக் கோடர்மாவிரிடி, வேம்பு உயிர் உரங்கள், யுமிக் அமிலம் ஆகியவற்றை தொழு உரமாக கலந்து ஊட்டமேற்றிய தொழு உரத்தினை ஏக்கருக்கு 100 முதல் 200 கிலோ என்ற அளவில் இட்டு உழவு செலவுகளை பெருமளவில் தவிர்க்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் முன்னோடி இயற்கை விவசாயி சண்முக ராமன் கலந்து கொண்டு பாரம்பரிய நெல்விதைகள் சாகுபடி, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிர் பாது காப்பு, சூழலில் பாது காப்பு மற்றும் அங்கக இடுபொருட்கள் உற்பத்தி ஆகியன குறித்து எடுத்து ரைத்தார். இதில் அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.. இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட மேலாளர்கள் சீனிவாசகுமார், ஹேமந்த்குமார், ஜெயப் பிரகாஷ் செய்திருந்தனர்.