பிரண்டை வற்றல் | Peranda Vathal / Pirandai Vathal in Traditional Way
தேவையான பொருள்கள் | அளவு |
---|---|
பிரண்டை (கணு நீக்கியது) | 2 கிலோ |
மோர் | 4 லிட்டர் |
இந்துப்பு | 100 கிராம் |
செய்முறை :
இந்துப்பை பொடியாக்கி மோரில் கலந்து பிரண்டைத் துண்டுகளை அதில் ஊறப்போடவும்.
மூன்று நாள் கழித்து பிரண்டைத் துண்டுகளைத் தனியே எடுத்து வெயிலின் உலர்த்தி எடுத்துக்கொள்ளவும்.
தேவைப்படும்போது இந்த பிரண்டைத் துண்டுகளை எண்ணெய்யில் போட்டு வறுத்துச் சாப்பிட்டால், ஜீரணக் கோளாறுகள் தீரும். மூல நோயாளிகளுக்கும் பயன்தரக் கூடியவை.