காவேரிப்பாக்கம் பகுதியில் இருந்து சோளிங்கர் செல்லும் நெடுஞ்சாலையில், ஏரி கரையின் கீழ் பகுதியில், பழமையான புளியமரம், வேப்ப மரம் மற்றும் பனைமரம் உள்ளிட்ட மரங்கள் உள்ளன. ஏரிக்கரையின் கீழ் பகுதியில் உள்ள மரங்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர்.

இதில் ஒரு சில மரங்கள் பலத்த மழை மற்றும் காற்று வீசும் போது, சாய்ந்து விடுகின்றன. இதனால் இரவு நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகின்றது.

இந்நிலையில் இந்த நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த வேப்ப மரம் நேற்று மாலை நேரத்தில், திடீரென முறிந்து நெடுஞ் சாலையில் விழுந்துள்ளது. இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஆனால் அதிர்ஷ்ட வசமாக இச்சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற் படவில்லை. தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலையில் விழுந்த வேப்ப மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது.