குறள் : 657

பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை

மு.வ உரை :

பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.

கலைஞர் உரை :

பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.

சாலமன் பாப்பையா உரை :

பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.

Kural 657

Pazhimalaindhu Eydhiya Aakkaththin Saandror
Kazhinal Kurave Thalai

Explanation :

Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful deeds.

Horoscope Today: Astrological prediction for February 9, 2022


இன்றைய ராசிப்பலன் - 09.01.2022


இன்றைய பஞ்சாங்கம்

09-02-2022, தை 27, புதன்கிழமை, அஷ்டமி திதி காலை 08.31 வரை பின்பு வளர்பிறை நவமி. கிருத்திகை நட்சத்திரம் இரவு 12.23 வரை பின்பு ரோகிணி. அமிர்தயோகம் இரவு 12.23 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கிருத்திகை. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். 

இராகு காலம்

மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 

Today rasi palan - 09.01.2022

இன்றைய ராசிப்பலன் - 09.01.2022


மேஷம்

இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். 

மிதுனம்

இன்று உங்களுக்கு பணிச்சுமை காரணமாக அலைச்சல், சோர்வு உண்டாகலாம். தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம்.

கடகம்

இன்று உடல்நிலையில் புது தெம்பும் உற்சாகமும் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் அமையும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். போட்டி பொறாமைகள் குறையும். 

கன்னி

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கல் சாதகமாக இருக்கும்.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல்கள் டென்ஷன்கள் அதிகரிக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் பெரியோர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபசெலவுகள் செய்ய நேரிடும். தொழில் விஷயமாக வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சேமிக்க முடியும்.

தனுசு

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழில் நிமித்தமாக பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

மகரம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். உத்தியோகத்தில் சுலபமான காரியங்கள் கூட கால தாமதமாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப அனுகூலமான பலன் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக இழப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ப உயர்வு கிட்டும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

மீனம்

இன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,