குறள் : 654
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்
மு.வ உரை :
அசைவற்ற தெளிந்த அறிவினையுடையவர் துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்.
கலைஞர் உரை :
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை :
தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.
Kural 654
Itukkan Patinum Ilivandha Seyyaar
Natukkatra Kaatchi Yavar
Explanation :
Those who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers).
இன்றைய ராசிப்பலன் - 06.02.2022
Horoscope Today: Astrological prediction for February 6, 2022
இன்றைய பஞ்சாங்கம்
06-02-2022, தை 24, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 04.38 வரை பின்பு வளர்பிறை சப்தமி. ரேவதி நட்சத்திரம் மாலை 05.09 வரை பின்பு அஸ்வினி. அமிர்தயோகம் மாலை 05.09 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 06.02.2022 Today rasi palan - 06.02.2022
மேஷம்
இன்று தொழில் ரீதியாக பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். திருமணம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீன கரமான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும்.
மிதுனம்
இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு கிட்டும்.
கடகம்
இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் நிம்மதி குறையக் கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறப்புக்கள் வழியாக மன சங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 5.09 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் வீண் விரயங்கள் உண்டாகும். எதிலும் சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. பயணங்களை தவிர்க்கவும்.
கன்னி
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு மாலை 5.09 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவரிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்க்கவும்.
துலாம்
இன்று நீங்கள் எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.
விருச்சிகம்
இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
தனுசு
இன்று குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். கையிருப்பு குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிட்டும். மன நிம்மதி ஏற்படும்.
மகரம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சுபகாரியங்கள் கைகூடும்.
கும்பம்
இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட கால தாமதமாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பண பற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும்.
மீனம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,