குறள் : 653
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மவர்
மு.வ உரை :
மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.
கலைஞர் உரை :
மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை :
உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
Kural 653
Oodhal Ventum Olimaazhkum Seyvinai
Aaadhum Ennu Mavar
Explanation :
Those who say we will become (better) should avoid the performance of acts that would destroy (their fame).
இன்றைய ராசிப்பலன் - 05.02.2022
Horoscope Today: Astrological prediction for February 5, 2022
இன்றைய பஞ்சாங்கம்
05-02-2022, தை 23, சனிக்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 03.47 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 04.08 வரை பின்பு ரேவதி. சித்தயோகம் மாலை 04.08 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. வஸந்த பஞ்சமி.
இராகு காலம்
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 05.02.2022 Today rasi palan - 05.02.2022
மேஷம்
இன்று குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோக ரீதியான பயணங்களில் வெளிவட்டார நட்பு கிட்டும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் வருமானம் இரட்டிப்பாகும்.
கடகம்
இன்று எந்த காரியத்தை செய்தாலும் தடைகளை சந்திக்க நேரிடும். வேலையில் சக ஊழியர்களுடன் வீண் மன ஸ்தாபங்கள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும்.
சிம்மம்
இன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. வெளி இடங்களில் மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக செல்வது நல்லது.
கன்னி
இன்று உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியான பயணங்களில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும்.
துலாம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்-.
விருச்சிகம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படலாம். செய்யும் செயல்களில் ஆர்வம் குறைந்து காணப்படும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும். கடன்கள் குறையும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
தனுசு
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் ஓரளவு குறைந்து சுமூகநிலை உருவாகும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. ஆன்மீக வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.
மகரம்
இன்று குடும்பத்தில் தனவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் மனமகிழும் நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறையும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். பணவரவு சிறப்பாக இருப்பதால் தேவைகள் நிறைவேறும். வேலையில் பணிச்சுமை குறையும்.
மீனம்
இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். திடீர் பயணம் செல்ல நேரிடும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,