குறள் : 650
இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார்
மு.வ உரை :
தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர் கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.
கலைஞர் உரை :
கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.
சாலமன் பாப்பையா உரை :
தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.
Kural 650
Inaruzhththum Naaraa Malaranaiyar Katradhu
Unara Viriththuraiyaa Thaar
Explanation :
Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance.
Horoscope Today: Astrological prediction for February 2, 2022
Today rasi palan - 02.02.2022
இன்றைய ராசிப்பலன் - 02.02.2022
இன்றைய பஞ்சாங்கம்
02-02-2022, தை 20, புதன்கிழமை, பிரதமை திதி காலை 08.31 வரை பின்பு துதியை பின்இரவு 06.16 வரை பின்பு வளர்பிறை திரிதியை. அவிட்டம் நட்சத்திரம் மாலை 05.53 வரை பின்பு சதயம். பிரபலாரிஷ்ட யோகம் மாலை 05.53 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. சந்திர தரிசனம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 02.02.2022
மேஷம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
ரிஷபம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன் கிட்டும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கப் பெற்று உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் சற்று குறையும்.
கடகம்
இன்று உங்களுக்கு மன உளைச்சல் அதிகமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.
சிம்மம்
இன்று தொழில் வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
கன்னி
இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
துலாம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உங்கள் தேவையை பூர்த்தி செய்வார்கள்.
விருச்சிகம்
இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
தனுசு
இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். நவீன பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
மகரம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு மனக்கசப்புகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்
இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் ஏற்படலாம். தடைப்பட்ட காரியம் கைகூடும் வாய்ப்பு அமையும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும்.
மீனம்
இன்று பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,