குறள் : 667
உருவுகண் டௌ;ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து
மு.வ உரை :
உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர் அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது.
கலைஞர் உரை :
உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை :
அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.
Kural 667
Uruvukantu Ellaamai Ventum Urulperundherkku
Achchaani Annaar Utaiththu
Explanation :
Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linchpin of the big rolling car.
Horoscope Today: Astrological prediction for February 19, 2022
இன்றைய ராசிப்பலன் - 19.01.2022
இன்றைய பஞ்சாங்கம்
19-02-2022, மாசி 07, சனிக்கிழமை, திரிதியை திதி இரவு 09.57 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. உத்திரம் நட்சத்திரம் மாலை 04.51 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 19.01.2022 | Today rasi palan - 19.01.2022
மேஷம்
இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வங்கி சேமிப்பு உயரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
ரிஷபம்
இன்று கடின உழைப்பால் மட்டுமே வேலையில் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றத்தை அடையலாம்.
கடகம்
இன்று பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.
சிம்மம்
இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிடைக்கும். எந்த விஷயத்திலும் நிதானம் தேவை.
கன்னி
இன்று வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும்.
துலாம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகள் அதிகரிக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சிக்கனமாக செயல்பட்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்
இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் அறிமுகம் ஏற்படும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு கல்வி விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும். அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வருமானம் பெருகும்.
மகரம்
இன்று குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனநிம்மதி குறையும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். உறவினர்களிடம் பேச்சில் கவனம் தேவை. தேக ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வெற்றி தரும்.
கும்பம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பண விஷயத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.
மீனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,