குறள் : 664

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

மு.வ உரை :

இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம் சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.

கலைஞர் உரை :

சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

சாலமன் பாப்பையா உரை :

நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

Kural 664

Solludhal Yaarkkum Eliya Ariyavaam
Solliya Vannam Seyal

Explanation :

To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far dificult it is to do according to what has been said.


Horoscope Today: Astrological prediction for February 16, 2022

இன்றைய ராசிப்பலன் - 16.02.2022



இன்றைய பஞ்சாங்கம்

16-02-2022, மாசி 04, புதன்கிழமை, பௌர்ணமி திதி இரவு 10.26 வரை பின்பு தேய்பிறை பிரதமை. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 03.14 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பௌர்ணமி விரதம். நவகிரக வழிபாடு நல்லது. 

இராகு காலம்

மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 

இன்றைய ராசிப்பலன் - 16.02.2022 Today rasi palan - 16.02.2022


மேஷம்

இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட்டும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சியில் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்

இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

கடகம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.

துலாம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். திடீர் தனவரவு உண்டாகும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வியாபாரம் பாதிப்படையாது. உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 03.14 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மகரம்

இன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 03.14 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுப நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது.

கும்பம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

மீனம்

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகலாம். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,