குறள் : 663
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்
மு.வ உரை :
செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும் இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
கலைஞர் உரை :
செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.
சாலமன் பாப்பையா உரை :
ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.
Kural 663
Kataikkotkach Cheydhakka Thaanmai Itaikkotkin
Etraa Vizhuman Tharum
Explanation :
So to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it beforehand will cause irremediable sorrow.
Horoscope Today: Astrological prediction for February 15, 2022
இன்றைய ராசிப்பலன் - 15.02.2022
இன்றைய பஞ்சாங்கம்
15-02-2022, மாசி 03, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 09.43 வரை பின்பு பௌர்ணமி. பூசம் நட்சத்திரம் பகல் 01.48 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.
இராகு காலம்
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 15.02.2022 Today rasi palan - 15.02.2022
மேஷம்
இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும்.
ரிஷபம்
இன்று உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வேலையில் ஈடுபாடு குறையக்கூடும். புதிய முயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை தரும்.
கடகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலம் உண்டாகும். வேலையில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும்.
கன்னி
இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்ல நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.
துலாம்
இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் லாபம் கிட்டும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவுடன் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். செய்யும் செயல்களில் நிதானமாக செயல்பட்டால் நற்பலன் கிட்டும்.
தனுசு
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளையும், வெளியூர் பயணங்களையும் தள்ளி வைப்பது நல்லது.
மகரம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.
மீனம்
இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணவரவுகளில் சிறு இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,