குறள் : 661
வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
மு.வ உரை :
ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும் மற்றவை எல்லாம் வேறானவை.
கலைஞர் உரை :
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.
சாலமன் பாப்பையா உரை :
ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.
Kural 661
Vinaiththitpam Enpadhu Oruvan Manaththitpam
Matraiya Ellaam Pira
Explanation :
Firmness in action is (simply) ones firmness of mind; all other (abilities) are not of this nature.
Horoscope Today: Astrological prediction for February 13, 2022
இன்றைய ராசிப்பலன் - 13.02.2022
இன்றைய பஞ்சாங்கம்
13-02-2022, மாசி 01, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி மாலை 06.42 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. திருவாதிரை நட்சத்திரம் காலை 09.27 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.
இராகு காலம்
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
Today rasi palan - 13.02.2022
இன்றைய ராசிப்பலன் - 13.02.2022
மேஷம்
இன்று உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். செலவுகள் குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளில் நற்பலன்கள் உண்டாகும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.
மிதுனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் பாதிப்புகள் குறையும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும்.
கடகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.
சிம்மம்
இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்ப்பார்த்த உதவி கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
கன்னி
இன்று பிள்ளைகளால் பெருமை அடையப் போகிறீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.
துலாம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.
விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம்.
தனுசு
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷத்தில் குறைவு இல்லாமல் இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் கொடுத்த கடன்கள் வசூலாகும்.
மகரம்
இன்று உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை காணப்படும்.
கும்பம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் பெண்கள் வழியில் அனுகூலப் பலன் உண்டாகும்.
மீனம்
இன்று உங்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழில் ரீதியாக வெளிமாநில தொடர்பு ஏற்படும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,