பிரதமரின் உணவு பதப்படுத்துதல் சிறு, குறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் செக்கு இயந்திரம் மற்றும் மாவு அரவை இயந்திரம் வாங்க அரசு மானியம் வழங்கப்படுவதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் உணவு பதப்படுத்துதல் சிறு, குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தப்பட்ட திட் டத்தின் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சமையல் எண்ணெய் தயார் செய்யும் சிறுகுறு உணவு பதப்படுத்தும் நிறு வனங்களுக்கும், புதிதாக மரச்செக்கு எண்ணெய் தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும், இதர உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கும் அரசு மானியத்தில் செக்கு இயந்திரம் மற்றும் மாவு அரவை இயந்திரம் ஆகியவை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மொத்த திட்ட மதிப்பீட் டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 10லட்சம் வரை மானியமாக பெறலாம்.
அதன்படி, ராணிப் பேட்டை மாவட்டத்தில் 10 பயனாளிகளுக்கு 60 லட்சம் வரை மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து தொழில்முனைவோருக்கு மானியம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட வேளாண் விற்பனைத் துறை துணை இயக்குனர் சீனிராஜ் கூறுகையில், கொரோனா மற்றும் இதர இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சிறு, குறு உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களை மேம்படுத்த இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வங்கிகளும் இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறது.
எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு அரசு மானித்தில் செக்கு இயந்திரம் மற்றும் மாவு அரவை இயந்திரம் வாங்கி தொழில்முனைவோர் பயன்பெற வேண்டும் என்றார்.