கரிசலாங்கண்ணி சூப்
தேவையான பொருட்கள் | அளவு |
---|---|
கரிசலாங்கண்ணிக் கீரை | ஒரு கட்டு |
தக்காளி | 2 |
வெங்காயம் | ஒன்று |
மிளகு, சீரகம் | தலா அரை ஸ்பூன் |
பூண்டு | 6 பல் |
தனியா, புதினா இலை | ஒரு கைப்பிடி |
உப்பு | தேவையான அளவு |
மஞ்சள் தூள் | ஒரு ஸ்பூன் |
பெருங்காயம் | கால் ஸ்பூன் |
எலுமிச்சை | ஒன்று |
எண்ணெய் | 2 ஸ்பூன் |
செய்முறை :
கீரையைச் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி
இரண்டையும் நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், பூண்டு, தனியா, புதினா, மஞ்சள் தூள், பெருங்காயம் ஆகியவற்றைத் தட்டிப்போட்டு வதக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கிக் கீரையையும் நன்கு வதக்கி, எலுமிச்சைச் சாறு பிழிந்து நன்கு பிரட்டவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்புப் போட்டு கொதிக்க வைத்து இறக்கவும். இந்த சூப்பை அடிக்கடி சாப்பிட்டால் கல்லீரல் பலமடையும். ரத்த சோகை மறையும்.