ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ரெண்டாடி கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் (40). ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அம்பிகா (36). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. தற்போது, அம்பிகா கர்ப்பிணியாக உள்ளனார்.

இதற்காக கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் பெற்று வருகிறார். கடந்த வாரம் அம்பிகாவுக்கு தலைவலி மாத்திரை கொடுத்தனர். அந்த அட்டைகளில் தேதி முடிந்து காலாவதியாகி இருப்பது தெரிந்தது. இதனால் கலங்கி போன அம்பிகா மாத்திரைகளை சாப்பிடாமல் அக்கம்பக்கத்தில் அழுது புலம்பியுள்ளார். அதனால். இது குறித்து சம்பந்தப்பட்ட மேலதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பிகா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அங்கு இருக்கும் நோயாளிகளிடம் விசாரித்தபோது, மருத்துவர்கள் யாரும் இந்த சுகாதார நிலையத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதுமில்லை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதும் இல்லை என்றும் வைத்தியம் பார்க்க யாரேனும் வந்தால் அவர்களுக்கு செவிலியர்கள் தான் சிகிச்சை அளிப்பார்கள் என்றும் பின் அவர்கள் அங்கு வரும் நோயாளிகள் அனைவருக்குமே ஒரே விதமான மாத்திரையை கொடுத்து அனுப்பி விடுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து அம்பிகாவின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்து இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவல நிலையை முடிவுக்கு கொண்டுவர கோரிக்கை விடுத்துள்ளனர். கர்ப்பிணிப் பெண்ணுக்கு காலாவதியான மாத்திரையை ஆரம்ப சுகாதார நிலையம் கொடுத்தஸ் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.