இந்தியாவில் கொரோனா 4வது அலை ஜூன் 22-ம் தேதி தொடங்கி அக்டோபர் 24-ம் தேதி வரை நீடிக்கும் என்றும் ஆகஸ்ட் மாதம் உச்சத்தை தொட்டு படிப்படியாக குறையலாம் என கான்பூர் ஐஐடி கணித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தற்போது சரிவை சந்தித்து வரும் நிலையில், ஜூன் 22ஆம் தேதி முதல் கொரோனாவின் நான்காவது அலை இந்தியாவில் தொடங்கி அக்டோபர் வரை நீடிக்கும் என கான்பூர் ஐஐடி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். ஐஐடி கான்பூரின் ஆராய்ச்சியாளர்கள் நாட்டில் கொரோனா அலையை கணிப்பது இது மூன்றாவது முறையாகும். அவர்களின் கணிப்புகள், குறிப்பாக மூன்றாவது அலையைப் பற்றிய கணிப்புகள் துல்லியமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.