சாம்பிராணி புகை போடுவது என்பது வீட்டில் ஹோமம் செய்வதற்கு இணையாக கருதப்படுகிறது. நம் முன்னோர்கள் தொன்றுதொட்டு வீடுகளிலும் அவர்கள் தொழில் செய்யும் இடங்களிலும் சாம்பிராணி போட்டு அந்த இடத்தையே தெய்வ கடாட்சத்துடன் வைத்திருந்தார்கள்.
வாரத்தில் இரண்டு முறையாவது சாம்பிராணி புகை போடுவது செல்வ வளத்தை அதிகரிக்கும்.
வீடு முழுவதும் மூலை முடுக்குகளிலெல்லாம் காண்பிக்க, வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் ஒழியும்.
சாம்பிராணி புகையில் நீங்கள் காய்ந்த வேப்பிலைகளை போட்டு தூபம் இடும் பொழுது வீட்டில் இருக்கும் கொசு தொல்லை நீங்கும். மேலும் நோய் நொடிகளிலிருந்து நல்ல ஒரு நிவாரணமும் பெற முடியும்.
சாம்பிராணி தூபம் அகில் போட்டு புகை மூட்டினால் அதிலிருந்து வரும் நறுமணத்தை குழந்தை பேறு இல்லாதவர்கள் சுவாசிக்கும் பொழுது அவர்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவில் உண்டாகும்.
சாம்பிராணியுடன் வெட்டிவேர் அருகம்புல் ஆகியவற்றை காய வைத்து தூபம் போட்டால் தோஷங்கள் யாவும் விலகி சுபகாரியங்கள் மற்றும் காரிய சித்தி உண்டாகும்.
வெள்ளிக் கிழமையில் தூதுவளை போட்டு காண்பிக்க குலதெய்வ குற்றங்களும் நீங்கும் சாம்பிராணி தூபத்தில் ஜவ்வாது மற்றும் சந்தனம் ஆகிய பொருட்களை போட்டு புகை மூட்டினால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறையும். காய்ந்த
துளசி இலைகளை போடும் பொழுது தடைகள் யாவும் விலகி வெற்றி கிடைக்கும்.
பிறந்த குழந்தைக்கு மிதமான புகையை தலைப் பகுதிக்கு காண்பிக்கும் பொழுது தலையில் இருக்கும் நீர் மண்டைக்குள் கோர்க்காமல், நோய் நொடிகள் அண்டாமல் பாதுகாப்பாக இருக்கும்.