குறள் : 651
துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்
மு.வ உரை :
ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும் செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.
கலைஞர் உரை :
ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்.
சாலமன் பாப்பையா உரை :
நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.
Kural 651
Thunainalam Aakkam Tharuum Vinainalam
Ventiya Ellaan Tharum
Explanation :
The efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desired.
Horoscope Today: Astrological prediction for February 3, 2022
இன்றைய ராசிப்பலன் - 03.02.2022
இன்றைய பஞ்சாங்கம்
03-02-2022, தை 21, வியாழக்கிழமை, திரிதியை திதி பின்இரவு 04.38 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. சதயம் நட்சத்திரம் மாலை 04.34 வரை பின்பு பூரட்டாதி. மரணயோகம் மாலை 04.34 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்
மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 03.02.2022
Today rasi palan - 03.02.2022
மேஷம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் தாராள தன வரவும், சுபிட்சமும் உண்டாகும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
மிதுனம்
இன்று உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்க கூடும். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
கடகம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
கன்னி
இன்று உங்களுக்கு உடல்நிலை மிக சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் சிலருக்கு மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
துலாம்
இன்று உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிட்டும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைந்து பிரச்சினை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.
தனுசு
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு உத்தியோகத்தில் கௌரவ பதவிகள் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். பண பிரச்சினை நீங்கும்.
மகரம்
இன்று குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனநிம்மதி குறையும். ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வேலையில் இருந்த போட்டி பொறாமை குறையும். ஆன்மீக செயல்களில் ஈடுபாடு உண்டாகும். தொழிலில் மந்த நிலை நீங்கும்.
கும்பம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சேமிப்பு உயரும்.
மீனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,