குறள் : 652

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை

மு.வ உரை :

புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.

கலைஞர் உரை :

புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை :

இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.

Kural 652

Endrum Oruvudhal Ventum Pukazhotu
Nandri Payavaa Vinai

Explanation :

Ministers should at all times avoid acts which in addition to fame yield no benefit (for the future).


Horoscope Today: Astrological prediction for February 4, 2022

இன்றைய பஞ்சாங்கம்

04-02-2022, தை 22, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 03.47 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 03.57 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. 

இராகு காலம்

பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

இன்றைய ராசிப்பலன் - 04.02.2022

Today rasi palan - 04.02.2022


மேஷம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் அமைதி குறையும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வெளி வட்டார நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமை குறைந்து லாபம் பெருகும்.

கடகம்

இன்று உங்களுக்கு எளிதில் முடியும் காரியம் கூட தாமதமாக முடியும். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 10.02 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. ஆரோக்கிய பிரச்சினைகள் படிப்படியாக குறையும். 

சிம்மம்

இன்று அசையும் அசையா சொத்துக்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு சேமிப்பு குறையும். பகல் 10.02 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதும் வண்டி, வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வதும் நல்லது. 

கன்னி

இன்று எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை மேலோங்கி இருக்கும்.

துலாம்

இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். வீட்டில் பணிச்சுமை குறையும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் சந்தோஷம் கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்பட்டு கையிருப்பு குறையும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிக்காது. சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிலும் நிதானம் தேவை.

தனுசு

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் இருந்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் இருந்த மன குழப்பங்கள் சற்று குறையும்.

மகரம்

இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபம் பெருகும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.

கும்பம்

இன்று உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்குப் பிறகு அனுகூலப்பலன் உண்டாகும். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

மீனம்

இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்ற நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,